பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை! ஆசிரியர் கைது! - Seithipunal
Seithipunal


நாகர்கோவிலில் பள்ளியில் ஓவிய ஆசிரியர் 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை. அவரை போக்சோவில் கைது செய்தனர்.

நாகர்கோவிலில் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஒரு பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். ஓவிய ஆசிரியராக இந்த பள்ளியில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ராமசந்திர சோனி என்பவர் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், அதே பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் ஓவிய ஆசிரியர் ராமசந்திர சோனி தன்னிடம் பாலியல் தொல்லை கொடுப்பதாக பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தார்.

இச்சம்பவம் குறித்து விசாரித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவியின் பெற்றோர் கூறினர். இதுதொடர்பாக பள்ளி நிர்வாகிகள் உடனடியாக விசாரணை நடத்தினர்.

இதனையடுத்து மாணவியின் புகார் அடிப்படையில் ஆசிரியரை அனைத்து மகளிர் போலீசார் காவல் நிலையம் விசாரணை நடத்தினர். 

இந்த விசாரணையில், ஆசிரியர் தான் தவறு எதுவும் செய்யவில்லை என்றும், மாணவியிடம் சகஜமாக பழகியதாகவும் கூறினார். பின்னர் சம்பந்தப்பட்ட மாணவியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்பொழுது ஆசிரியர் ராமசந்திர சோனி தன் கையை தொட்டு இழுத்து தொந்தரவு கொடுத்ததாக அந்த மாணவி கூறினார்.

மேலும் ஆசிரியர் ராமசந்திர சோனி மீது போக்சோ பிரிவின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். ஆசிரியர் ராமசந்திர சோனி மீது 15-க்கும் மேற்பட்ட மாணவிகள்  புகார் கூறியதாக கூறப்படுகிறது. எனவே இந்த புகார்கள் தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
,


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

School girl sexually harassed Teacher arrested


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->