பள்ளியின் மாடியிலிருந்து குதித்த மாணவி.. சோகத்தில் குடும்பத்தினர்.!
School girl suside in thiruchengkodu
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சீத்தாராம் பாளையம் சக்திவேல் நகர் பகுதியை சேர்ந்தவர் சங்கர், இவரது மனைவி சந்தனமாரி. இந்த தம்பதியினருக்கு 14 வயதில் மகள் உள்ளார். இவர் திருச்செங்கோடு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று மதியம் வாந்தி வருவதாக கூறி வகுப்பறையில் இருந்து வெளியே சென்ற மாணவி பள்ளியின் இரண்டாவது மாடியில் இருந்து திடீரென கீழே குதித்துள்ளார்.
இதில் கால் எலும்பு முறிந்து, வயிற்றில் பலமாக அடிபட்ட நிலையில் கிடந்த மாணவியை ஆசிரியர்கள் உடனடியாக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அந்த மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து திருச்செங்கோடு நகர போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
English Summary
School girl suside in thiruchengkodu