நான்கு மாவட்டங்களில் இன்று பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும்.!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் நான்கு மாவட்டங்களும் பெரிதளவில் பாதிக்கப்பட்டது. 

அப்போது பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த விடுமுறை நாட்களை ஈடுசெய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அப்போது அறிவித்திருந்தார்.

அதன் படி, சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்துவது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை, தொடக்க கல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. 

இந்த நிலையில், ஜனவரி மாதம் பொங்கல், குடியரசு தினம் என்று தொடர்ந்து அரசு விடுமுறை நாட்கள் வருவதையடுத்து, மீதமுள்ள வார நாட்களில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. 

அதன்படி, ஜனவரி மாதத்தில் 6ஆம் தேதி, 20ஆம் தேதியும், பிப்ரவரி மாதத்தில் 3, 17ஆம் தேதிகளிலும் பள்ளிகள் செயல்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படியே, சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளும் இன்று சனிக்கிழமை செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை மீண்டும் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school run today in four districts


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->