கதவை திறந்த சிறுவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி - ஈரோட்டில் பரிதாபம்.! - Seithipunal
Seithipunal


கதவை திறந்த சிறுவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி - ஈரோட்டில் பரிதாபம்.!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் வடக்கு பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சண்முகராஜா மகன் பிரவீன். இவர் கொடிவேரியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். தற்போது பள்ளி விடுமுறை என்பதால், பிரவீன் வடக்கு பேட்டை பகுதியில் உள்ள தன் தந்தையின் மளிகைக் கடைக்கு சென்று வந்தார்.

இந்த நிலையில் பிரவீன் நேற்று காலை வழக்கம்போல் மளிகைக் கடையை திறந்துள்ளார். அப்போது கடையின் ஷட்டரில் மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் பாய்ந்துள்ளது. இதையறியாத பிரவீன் ஷட்டரை தூக்கிய போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். 

இந்த சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பிரவீனை மீட்டனர். பின்னர் அவர்கள் பிரவீனை சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் பிரவீன் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். 

இதையடுத்து மருத்துவமனை சார்பில் போல்லீசனுக்குத் தகவல் அளிக்கப்பட்டது. அதன் படி போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school student died for electric shock attack in erode


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->