விழுப்புரம் || ஆசிரியர் கண்டித்ததால் பள்ளி மாணவி தற்கொலை.! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டம் நாராயணா நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஒன்றில் பனிரெண்டாம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஒருவர் கடந்த13ம் தேதி நடைபெற்ற அரையாண்டு தமிழ் பாட தேர்வில் பிட் அடித்தபோது ஆசிரியரிடம் மாட்டிக்கொண்டுள்ளார். 

இதையடுத்து பள்ளியின் தலைமை ஆசிரியர் பெற்றோரை அழைத்து மாணவியைக் கண்டித்துள்ளார். இதனால், மன உளைச்சலுக்கு ஆளான மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதைப்பார்த்த மாணவியின் பெற்றோர், அவரை மீட்டு விழுப்புரத்திலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவி ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். 

இதைக்கேட்டு ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர் உறவினர்களுடன் சென்று பள்ளியை முற்றுகையிட்டு ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீஸார் பள்ளியில் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தவர்களை அப்புறப்படுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school student sucide in vilupuram


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->