வெள்ளி விழா - அரிசியில் திருவள்ளுவர் சிலை செய்து அசத்திய பள்ளி ஆசிரியர்.!
school teacher make thiruvalluvar statue with rice
அனைவராலும் உலகப் பொதுமறை என்றுப் போற்றப்படும் திருக்குறளை தந்த திருவள்ளுவருக்கு தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டமான கன்னியாகுமரி கடலில் 133 அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை வடிவமைத்து 25 ஆண்டுகள் ஆகின்றது.
இதனால், தமிழக அரசு சார்பில் திருவள்ளுவர் சிலைக்கு வெள்ளி விழா கொண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பகுதியை சேர்ந்த தனியார் பள்ளியில் பணியாற்றி வரும் ஓவிய ஆசிரியர் சரவணன் என்பவர் திருவள்ளுவருக்கு அரிசியில் சிலை செய்து அசத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:- "திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு அவரை பெருமைப்படுத்தும் விதமாகவும், தனது ஓவிய திறமை மூலமாகவும் அரிசிகளை கொண்டு சுமார் 3 அங்குலம் உயரத்தில் திருவள்ளுவர் சிலையை உருவாக்கினேன்" என்றுத் தெரிவித்துள்ளார்.
English Summary
school teacher make thiruvalluvar statue with rice