#BREAKING : தமிழகத்தில் பள்ளிகள் இன்று வழக்கம்போல் இயங்கும்.. தமிழக அரசு அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகில் உள்ள கனியாமூர் தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்துவந்த 12-ம் வகுப்பு மாணவி 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து நேற்று நடைபெற்ற போராட்டத்தில் போராட்டக்காரர்கள் பள்ளியின் மீது கல்வீச்சு, பேருந்துக்கு தீ வைத்தல் உள்ளிட்ட கலவர செயல்களில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு செயலாளர் நந்தகுமார் இன்று முதல் தனியார் பள்ளிகள் இயங்காது என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தனியார் பள்ளிகள் இதுபோல் விடுமுறை விட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் இன்று தமிழகத்தில் தனியார் பள்ளிகள் வழக்கம் போல இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளும் இன்று இயங்கும் என்று அம்மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Schools in Tamil Nadu will function as normal today


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->