மாணவர்களே நோ டென்ஷன்! பழைய பஸ் பாஸ்சிலேயே பயணிக்கலாம்!
Schools reopen student free old bus pass use government bus
கோடை விடுமுறை முடிந்து விரைவில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பழைய பஸ் பாஸ்ஸை பயன்படுத்தி அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. கடந்த மே 6ஆம் தேதி பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகிறது. அதனை தொடர்ந்து மே பத்தாம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியது.
தமிழகத்தில் கடந்த இரண்டு மூன்று வாரங்களாகவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை ஆங்காங்கே பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் இன்று முதல் கத்திரி வெயில் நிறைவடைவதாக தெரிவித்துள்ளது. கோடை விடுமுறை எப்போதும் முடியும் பள்ளிகள் எப்போது திறக்கும் என்ற கேள்விக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்தது.
ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளிகளில் பராமரிப்பு பணிகள் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், உடனடியாக மாணவ, மாணவிகளுக்கு புதிய பஸ் பாஸ் வழங்குவது சாத்தியமில்லாததது.
அரசு போக்குவரத்து கழகம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள தகவலின் படி, பள்ளி மாணவ, மாணவிகள் கடந்தாண்டு பயன்படுத்திய பஸ் பாஸ்ஸை பயன்படுத்தி அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. இந்த நடைமுறை புதிய பஸ் பாஸ் வழங்கும் வரை தான் என்று குறிப்பிட்டுள்ளது. இந்த அறிவிப்பால் பள்ளி மாணவ,மாணவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
English Summary
Schools reopen student free old bus pass use government bus