சென்னையில் பிரமாண்ட அறிவியல் கண்காட்சி - தமிழக அரசு அதிரடி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் உயர்கல்வித் துறையின் ஒரு அங்கமான அறிவியல் நகரம் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கிடையே அறிவியல் விழிப்புணர்வு மற்றும் அறிவியல் சார்ந்த பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதில் மிகமுக்கியமான நிகழ்ச்சி சென்னை அறிவியல் விழா. இந்த விழா கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசின் ஆதரவுடன் மிக சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த விழாவினை வெற்றிகரமாக நடத்துவதற்காக முக்கிய உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களான அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், இந்திரா காந்தி அணு ஆற்றல் ஆராய்ச்சி மையம், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, தமிழ்நாடு கால்நடை மருத்துவ மற்றும் கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம், இந்திய மருத்துவ இயக்குநரகம், புற்றுநோய் நிறுவனம் போன்ற அறிவியலில் தலை சிறந்து விளங்கும் நிறுவனங்கள் வருகை புரிந்து சமுதாயத்தின் அனைத்து தரப்பினர்களுக்கும் காட்சி பொருட்களை வைத்து அவர்கள் பயனடையும் வண்ணம் ஏற்பாடு செய்யப்படும்.

சென்னை அறிவியல் விழாவில் பிரமாண்டமான அறிவியல் கண்காட்சி அரங்குகள் மற்றும், அறிவியல் செய்முறை விளக்கங்கள், மற்றும் அறிவியல் கருத்துகளை மக்களிடையே எடுத்துச் செல்ல நாட்டுபுற கலைகளான பொம்மலாட்டம், தெரு கூத்து, வில்லுப்பாட்டு, கிராமிய பாடல்கள் ஆகியன இடம் பெறுகின்றன.

இந்த விழா 26.03.2025 முதல் 28.03.2025 வரை பெரியார் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மைய வளாகத்தில் காலை 10.00 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

science exhibition start in chennai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->