குற்றால அருவிகளில் பயணிகள் உற்சாக குளியல் - சீசன் தொடங்கியது..! - Seithipunal
Seithipunal



தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள ஒரு மாவட்டமாகும். இந்த மாவட்டத்தில் தான் குற்றாலம் அமைந்துள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை சாரல் மழை பொழியும்.

இந்நிலையில் சனிக்கிழமையான இன்று குளிர்ந்த காற்றுடன் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. மேலும் அருவிகளிலும் தண்ணீர் வரத்து ஓரளவுக்கு இருந்தது. கோடை விடுமுறையோடு வார இறுதி விடுமுறையும் சேர்ந்துள்ளதால் இன்று குற்றால அருவிகளில் கூட்டம் சற்று அதிகமாக காணப்பட்டது.

தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் கூட்டமாக அருவிகளில் வந்து குதூகலத்துடன் மகிழ்ச்சியாக குளித்து செல்கின்றனர். மலைகள் சூழ இருக்கும் தென்காசி மாவட்டமே மக்களை மிகவும் கவர்ந்திழுக்கும்.

அதோடு இம்மாவட்டத்தில் உள்ள குற்றால அருவிகளில், சாரல் மழை பொழியும் சீசன் காலங்களில் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டும். அப்போது அங்கு வீசும் குளிர்ந்த காற்றும், மலைகளில் தவழ்ந்து செல்லும் மேகக் கூட்டங்களும் அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தும். 

இப்போது இங்கு குற்றாலத்தில் சாரல் சீசன் தொடங்கியுள்ளதால், அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. அதோடு குளிர் காற்றும், சாரல் மழையும் அனைவரையும் குற்றாலத்தின் பக்கம் ஈர்த்து வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Season Begins in Courtallam Tourists Enjoying in Falls


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->