சிறுவர்களின் நலனுக்கு ஆஸ்திரேலியாவில் புதிய சட்டம் அமல்! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் இன்றைய தலைமுறையினர் மத்தியில் அதிக அளவு சமூக வலைதள பயன்பாடு உள்ளது. மேலும், பள்ளிக் குழந்தைகள்  எப்போதும் சமூக வலைதளங்களில் மூழ்கி இருப்பதால் அவர்களின் கல்வி பாதிக்கப்படும் சூழல் ஏற்படுவதோடு, சில குழந்தைகள் மன ரீதியாகவும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களை பார்க்க தடை விதிக்கும் வகையில் ஆஸ்திரேலியாவில் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், உலகிலேயே முதல் முறையாக சிறுவர்களின் நலனுக்காக இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலியா பிரதமர் தெரிவித்துள்ளார்.

புதிய சட்டம் குறித்து அந்நாட்டு அமைச்சர் கூறுகையில், சமூக வலைதளங்களை சிறுவர்கள் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் சட்டம் அமலுக்கு வந்துள்ளதாகவும், இதனையடுத்து அந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான கட்டமைப்பை உருவாக்க தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஓராண்டு கால அவகாசம் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

ஆனால், இந்த கட்டமைப்பிற்கும் சமூக ஊடகப் பயன்பாட்டாளர்கள் அனைவரின் தனிப்பட்ட தகவல்களையும் சேகரிக்க நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படாது என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

New law in australia for the welfare of children


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->