தமிழ்நாடு, புதுச்சேரியில் 1.90 லட்சம் போலீஸ் குவிப்பு..‌ பாதுகாப்பு பணி தீவிரம்.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகள் விலகோடு சட்டமன்றத் தொகுதி மற்றும் புதுச்சேரியில் ஒரு நாடாளுமன்ற தொகுதி என அனைத்திற்கும் ஒரே கட்டமாக நாளை காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 

அதேபோன்று புதுச்சேரியில் 26 வேட்பாளர்கள் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றனர். தமிழகத்தை போன்று அசாம் பீகார் மத்திய பிரதேசம் மகாராஷ்டிரா ராஜஸ்தான் உத்தரகாண்ட் உள்ளிட்ட 21 மாநிலங்களில் நூற்றி இரண்டு தொகுதிகளுக்கு நாளை முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

நாளை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் மக்களவைத் தேர்தலை ஒட்டி 1.90 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

குறிப்பாக பதட்டமான வாக்குச்சாவடிகளில் போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 68,321 வாக்குச்சாவடிகளில் 44,900 வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தப்பட்டு வாக்குப்பதிவின்போது கண்காணிக்கப்படும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாடு முழுவதும் 6000 பகுதிகள் பதற்றுமானவை என கண்டறியப்பட்டு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Security arrangements are intense in tn puducherry polling


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->