பிரதமர் வருகை எதிரொலி - கன்னியாகுமரியில் பாதுகாப்பு பணி தீவிரம்.! - Seithipunal
Seithipunal


வருகிற 30-ந் தேதி (நாளை மறுநாள்) பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரிக்கு வருகை தருகிறார். அன்று மாலை கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறைக்கு படகு மூலம் சென்று சுற்றிப் பார்க்கிறார். பின்னர் அங்குள்ள தியான மண்டபத்திற்கு சென்று தியானத்தில் ஈடுபட உள்ளார். 

3 நாட்கள் தியானத்திற்குப் பிறகு ஜூன் 1-ந் தேதி தியான மண்டபத்தில் இருந்து வெளியே வந்து டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். இந்த நிலையில், பிரதமர் மோடியின் வருகையையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

அதாவது, பிரதமர் மோடி தியானம் மேற்கொள்ள உள்ள விவேகானந்தர் மண்டபத்தைச் சுற்றி கடலோர பாதுகாப்பு படை ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல், கன்னியாகுமரி சுற்றுலா பகுதிகளிலும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 

மேலும், கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரை வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே பிரதமர் மோடியை வரவேற்பதற்கான ஏற்பாடுகளையும் பா.ஜனதாவினர் தீவிரமாக செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

security arrangements in kanniyakumari for pm modi visit kanniyakumari


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->