பச்சை துரோகி கருணாநிதிக்கு புனிதர் பட்டமா கொடுக்க முடியும் - சீமான் ஆவேச பேட்டி! - Seithipunal
Seithipunal


நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறு பேசியதாக இன்று குற்றாலத்தில் வைத்து போலீசார் கைது செய்து இருந்தனர்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று செய்தியாளர்களை சந்தித்து தெரிவிக்கையில்,

"இதில் என்னங்க அவதூறு இருக்கிறது. அது ஒரு பாட்டு. கள்ளத்தனம் செய்த கிராதகன் கருணாநிதி, சதிகாலன் கருணாநிதி.... என்பது பாட்டு. அந்த பாடலை உங்களுக்கு அனுப்பவா? 

இந்த பாடலை எழுதியவனை விட்டுவிட்டு, பாடிய அவனை விட்டுவிட்டு, திருப்பி பாடியவனை கைது செய்துள்ளார்கள்.

இப்போது நான் பாடுகிறேன் என் மீது வழக்கு தொடருங்கள் என்று செய்தியாளர் சந்திப்பிலேயே அந்தப் பாடலை சீமான் பாடினார்.

தொடர்ந்து பேசிய சீமான். இப்போது என் மீது வழக்கு போடு பார்க்கலாம். நீ புள்ள பூச்சியை பிடித்து விளையாடிக் கொண்டிருக்கிறாய். தேள், பாம்பை பிடித்து விளையாடுவாயா? சிங்கத்தோடும் ஓதுவாயா விளையாடுவாயா?

முன்னாள் முதல்வர் உங்க அப்பா, நீ அதிகாரத்திற்கு வந்ததும் அவருக்கு புனிதர் பட்டம் கட்ட பார்க்கிறாயா? தமிழ் பேரினத்திற்கு துரோகம் செய்த பச்சை துரோகி கருணாநிதி. யார் தர்க்கம் செய்வார் இதில்.

அதிகாரம் வந்தவுடன் உங்க அப்பாவுக்கு புனித பட்டம் செய்தால், துரோகம் எல்லாம் மறந்து விடுமா? இந்த நாட்டில், தமிழர் இன அரசியல் வரலாற்றில் தீய ஆட்சியின் தொடக்கம், தீய அரசியலின் தொடக்கமே ஐயா கருணாநிதி வந்து உட்கார்ந்த பிறகு தான் என்று சீமான் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Seeman contempt DMK government for saattai Durai Murugan arrest


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->