மதுரை | விமான நிலையத்தில் திடீர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட செல்லூர் ராஜூ.! காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏவும் ஆன பி.வி. கதிரவன் இல்ல திருமண விழா மதுரை, வேலம்மாள் ஐடாஸ்கட்டர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது. 

இந்த திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் இருந்து விமான மூலம் இன்று காலை 7 மணி அளவில் மதுரை வந்தார். 

எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்க மதுரை மட்டுமன்றி அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் விமான நிலையத்தில் சூழ்ந்திருந்தனர். வெளியே வரும் பாதை வழியாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வந்தார். 

அவர் அங்கிருந்து விமான நிலையத்திற்குள் சென்ற பின்னரும் அவரது வாகனம் அங்கேயே நின்று கொண்டிருந்தது. இதனை பார்த்த விமான நிலைய பாதுகாப்பு போலீசார் மற்றும் அதிகாரிகள் காரை அங்கிருந்து அப்புறப்படுத்த வலியுறுத்தினர். 

ஆனால் காரை எடுக்காமல் இருந்ததால் அதிகாரிகள் வாகனத்தை சற்று நேரத்தில் அகற்றாவிட்டால் லாக் செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த அ.தி.மு.க தொண்டர்கள் விமான நிலைய அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இதனை தொடர்ந்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு அ.தி.மு.க தொண்டர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு பின்னர் கார் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து விமான நிலையத்தை விட்டு வெளியே வந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சால்வை அணிந்து உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். 

அதனை ஏற்றுக் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி இடம் தொண்டர் ஒருவர் ''கவலைப்படாதீர்கள் 2026 நம்ம தான்'' என தெரிவித்துள்ளார். இதனை கேட்ட எடப்பாடி சிரித்தபடி அங்கிருந்து புறப்பட்டார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sellur Raju argument Madurai airport


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->