2000 நோட்டு கொடுத்தால் 500 ரூபாய் நோட்டு கிடைக்கும் - பரபரப்பை கிளப்பிய போஸ்டர்.! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பர்கூருக்கு செல்லும் வழியில் மேம்பாலம் உள்ள பகுதியில் போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டிருந்தது. அந்த போஸ்டரில், 2000 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக 500 ரூபாய் நோட்டுகள் வழங்கப்படும் எனவும் அவ்வாறு தேவைப்படும் நபர்கள் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொள்ள வேண்டும் என்று செல்போன் எண்ணும் கொடுக்கப்பட்டிருந்தது.

இந்த போஸ்டரை பார்த்த மக்கள் அதனை உண்மை என்று நம்பி அதில் கொடுக்கப்பட்ட அந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசியபோது, 2000 ரூபாய் நோட்டுகள் தந்தால் தான் மூன்று 500 ரூபாய் நோட்டுகள் தரப்படும் நோட்டுகளை மாற்றி தருவதற்கு 500 ரூபாய் கமிஷன் எடுத்துக் கொள்வோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மக்கள் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில் செல்போனில் பேசிய நபர் கிருஷ்ணகிரி மாவட்டம் பெலவர்த்தி ஊராட்சி வள்ளுவர் புரத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டதில், பொங்கல் பண்டிகையின் போது அவரது வீட்டை சுத்தம் செய்தபோது, 2000 ரூபாய் நோட்டுகள் மொத்தம் 4 கிடைத்ததாகவும் அதனை ரிசர்வ் வங்கியில் 500 ரூபாய் நோட்டாக மாற்றிய நிலையில் இதனை வைத்து லாபம் பார்க்கலாம் என்று எண்ணி சுவரொட்டி ஒட்டியதாகவும் தெரிவித்தார். 

மேலும், அவர் விசாரணைக்கு வந்த போலீசாரிடமே உங்களிடம் 2000 ரூபாய் நோட்டுகள் இருந்தால் கொடுங்கள் மாற்றித் தருகிறேன் என்றும் கேட்டுள்ளார். இது போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

send 2000 notes get 500 notes poster viral in krishnagiri


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->