செந்தில்பாலாஜி வழக்கில் திடீர் திருப்பம்! பின்னணியில் சதியா? அதிரவைக்கும் அமலாக்கத்துறை!
Senthil Balaji ED Case Chennai Court order june 2024
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு மீதான உத்தரவை தள்ளி வைக்க கோரி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் புதிதாக 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணையை தாமதப்படுத்தவே செந்தில் பாலாஜி தரப்பில் புதிது புதிதாக மனுக்களை தாக்கல் செய்கிறார் என்று, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.
இதனையடுத்து செந்தில் பாலாஜி தரப்பு வாதத்திற்காக இந்த மனுக்கள் மீதான விசாரணையை வெறும் ஜூலை 3ஆம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜூலை 1ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், செந்தில் பாலாஜி வழக்கை 4 மாதங்களில் முடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு சட்ட விரோதமாக பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
மேலும், அவரது ஜாமீன் மனுவை சென்னை அமர்வு நீதிமன்றமும் சென்னை உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்ததன் காரணமாக ஒரு வருடத்திற்கும் மேலாக அவர் சிறையில் இருந்து வருகிறார். தற்போதுவரை செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் 42வது முறை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
English Summary
Senthil Balaji ED Case Chennai Court order june 2024