டாஸ்மாக்கில் ரூ.2,000 நோட்டுக்கு தடை இல்லை.. அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்..!! குடிமகன்கள் நிம்மதி..!! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் வரும் செப்டம்பர் 30ஆம் தேதிக்கு மேல் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில் வரும் மே 23 ஆம் தேதியில் இருந்து செப்டம்பர் 30 ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து கணக்கில் வரவு வைத்துக்கொள்ளலாம் அல்லது வேறு ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம்.

தினமும் 20,000 ரூபாய் மதிப்புள்ள இரண்டு ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வங்கியில் மாற்றலாம். வங்கிகளில் செலுத்தப்படும் ரூ.2000 நோட்டுக்களை வங்கிகள் புழக்கத்தில் விடக்கூடாது என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி இருந்தது.

இந்த நிலையில் 2000 ரூபாய் நோட்டு திரும்ப பெறப்படுவதாக அறிவிக்கப்பட்ட உடனே டாஸ்மாக் நிர்வாகம் டாஸ்மாக் கடைகளில் 2000 ரூபாய் நோட்டுகளை ஊழியர்கள் வாங்க கூடாது என்று மாவட்ட அளவிலான டாஸ்மாக் அலுவலர்கள் டாஸ்மாக் ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். அதையும் மீறி 2000 ரூபாய் நோட்டுகளை வாங்கினால், அதற்கு டாஸ்மாக் விற்பனையாளர் மற்றும் மேற்பார்வையாளரே பொறுப்பு என்று டாஸ்மாக் அலுவலர்கள் சுற்றறிக்கை அனுப்பியதாக தகவல் வெளியானது.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி "முற்றிலும் தவறான செய்தி.. இது போல எந்த சுற்றறிக்கையும் அனுப்பப்படவில்லை" என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் குடிமகன்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Senthil balaji said no ban on Rs2000 notes at Tasmac shops


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->