செந்தில்பாலாஜியை விடுவிக்க உத்தரவு! இன்னும் சற்று நேரத்தில் வெளியே வருகிறார்!
Senthilbalaji Case Chennai Court
அரசு வேலை வாங்கி தருவதாக பணமோசடி செய்த வழக்கு மற்றும் அமலாக்கத் துறையின் சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் இன்று நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
இதனையடுத்து உச்சநீதிமன்ற தீர்ப்பின் உத்தரவுகள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.
அப்போது, செந்தில் பாலாஜியை பிணையில் விடுவிக்க ஆட்சேபம் இல்லை என்று, அமலாக்கத்துறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் பதில் அளித்தது.
இருப்பினும் 2 முறை வழக்கு விசாரணை பல்வேறு காரணங்களால் தள்ளிவைக்கப்பட்ட நிலையில், தற்போது செந்தில்பாலாஜியை ஜாமினில் விடுவிக்க நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
இன்னும் சற்று நேரத்தில் அவர் புழல் சிறையிலிருந்து வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Senthilbalaji Case Chennai Court