செந்தில்பாலாஜி விவகாரம் | அட்டர்னி ஜெனரலுக்கு பறந்த அவசர கடிதம்! - Seithipunal
Seithipunal


செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி நீக்கம் தொடர்பாக, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞருக்கு (அட்டர்னி ஜெனரல்) தமிழக ஆளுநர் அவசர கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.

கடந்த 14ஆம் தேதி பண மோசடி மற்றும் சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்க துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.

அப்போது அவருக்கு ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் தனியார் மருத்துவமனையில் அவருக்கு இருதய பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் இருந்த துறைகள் பறிக்கப்பட்டு, அவர் இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பார் என்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆளுநருக்கு பரிந்துரை செய்திருந்தார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் உண்மையான காரணத்தை தன்னிடம் மறைப்பதாக கூறி ஆளுநர் அதற்கு மறுப்பு தெரிவித்தார்.

தொடர்ந்து கடந்த மாதம் 29ஆம் தேதி மாலை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக ஆளுநர் உத்தரவு பிறப்பித்தார்.

அடுத்த ஐந்து மணி நேரத்தில் தான் பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைப்பதாகவும், அமைச்சரவிலிருந்து செந்தில் பாலாஜியை நீக்குவது குறித்து மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் கருத்து கேட்க இருப்பதாகவும், இது குறித்த தகவல் வரும் வரை உத்தரவு நிறுத்தி வைக்கப்படுவதாக ஆளுநர் அந்த உத்தரவில் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கிய உத்தரவு தொடர்பாக, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர் வெங்கட்ரமணிக்கு, தமிழக ஆளுநர் விரிவான ஒரு கடிதத்தை எழுதியுள்ளார்.

இந்த கடிதத்திற்கு பதில் கிடைத்த பிறகு, அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான நடவடிக்கை குறித்து ஆளுநர் முடிவெடுத்து அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Senthilbalaji issue TN Governor letter july 2023


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->