சென்னை மற்றும் திருவண்ணாமலை பகுதிகளில் தொடர்ச்சியான திருட்டு: இருவர் கைது - Seithipunal
Seithipunal


சென்னையின் பெரியமேடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ச்சியான திருட்டில் ஈடுபட்டதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை பெரியமேடு மகதூம் ஷெரீப் தெருவைச் சேர்ந்த முகமது பஹீம் தனது கடை முன்பு நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் மாயமானது. இதுகுறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, போலீசார் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர்.

அந்த தகவலின் அடிப்படையில் கொருக்குப்பேட்டை அண்ணாநகரைச் சேர்ந்த செல்வம் (38) மற்றும் அவரது கூட்டாளி ரவி (38) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், இவர்களது திருட்டு செயல்கள் பல்வேறு இடங்களில் நடந்திருப்பதும் தெரியவந்தது.

இருவரும் மொத்தம் 5 இருசக்கர வாகனங்கள் மற்றும் பல்லவன் சாலை அருகே நடந்து சென்றவரை தாக்கி செல்போன் மற்றும் பணம் பறித்ததும் அம்பலமானது. மேலும், கைதான செல்வத்துக்கு திருவண்ணாமலை, தாம்பரம், பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் 8 திருட்டு வழக்குகள் நிலுவையிலிருக்கின்றன.

இந்த கைது நடவடிக்கையில் 5 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு செல்போன் மீட்கப்பட்டன. மேலும், இவர்களின் திருட்டு நடவடிக்கைகள் தொடர்பான விசாரணை மும்முரமாக நடைபெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Serial robbery in Chennai and Tiruvannamalai Two arrested


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->