விஷச் சாராயம் விவகாரம் - 7 பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம், மாதவச்சேரி, சேஷசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மாதம் 19-ந் தேதி விஷ சாராயம் குடித்து 229 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் சிகிச்சை பலனின்றி 6 பெண்கள் உள்பட மொத்தம் 66 பேர் பரிதாபமாக உயிாிழந்தனா்.

மேலும், 161 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியிருந்தனர். மேலும், 2 பேர் மட்டும் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தனா். 

இதில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கருணாபுரம் திருவரங்கம் நகரை சோ்ந்த கண்ணன் என்பவர் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி பாிதாபமாக உயிாிழந்தாா். இதன் மூலம் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 67 ஆக உயா்ந்தது.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் சண்முகம் உள்பட 7 பேரை விஷ சாராயத்தை தடுக்க தவறியதற்காகவும், அலட்சியமாக செயல்பட்டதற்காகவும்காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

seven police officer change to waiting list for kallakurichi liquar case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->