சொந்த ஊர்களுக்கு செல்ல 70 ஆயிரம் பேர் முன்பதிவு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு செல்ல இருப்பதால், சென்னையிலிருந்து பிற மாவட்டங்களுக்கு பயணிக்க ஏராளமானோர் ஆர்வம் காட்டுகின்றனர்.

இவர்களுக்காக, ரயில்வேத்துறை மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை சார்பில் சிறப்பு ரயில்கள் மற்றும் அரசுப்பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தீபாவளியை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட ரயில்களில் ஏற்கெனவே டிக்கெட்டுகள் விற்பனை முடிவடைந்துவிட்டது. 

இதனால் பலரும், அரசுப் பேருந்துகளையே நம்பியுள்ளனர். இவர்களின் வசதிக்காக இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளை தமிழ்நாடு அரசின் விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்து, முன்பதிவு வசதியை அறிவித்திருந்தது.

இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு செல்ல தற்போது வரை 70 ஆயிரம் பயணிகள் முன்பதிவு செய்துள்ளதாக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. 

அதிலும், குறிப்பாக சென்னையில் இருந்து மட்டும் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களுக்குச் செல்ல 46 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

seventy thousand peoples advanced booked tickets for deepavali festival


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->