குளத்தில் குளிக்கச்சென்ற அக்கா தம்பி இருவரும் பலி.. சோகத்தில் குடும்பத்தினர்.! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ஓடப்பன்குப்பம் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனிஷா (12) என்ற மகளும் சுரேஷ் (10) என்ற மகனும் உள்ளனர்.

இருவரும் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலிருந்து ஆடுகளை மேய்ப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த குளத்தில் குளிப்பதற்காக இறங்கியுள்ளான். அப்போது எதிர்பாராதவிதமாக சுரேஷ் குளத்திற்குள் மூழ்கியுள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அனிஷா தம்பியை காப்பாற்றுவதற்காக குளத்தில் இறங்கியுள்ளார். இதில் அனிஷாவும் குளத்தில் மூழ்கியுள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் குளத்தில் மூழ்கிய இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக முத்தாண்டிகுப்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sister and brother killed while bathing in pool


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->