சென்னையில் 6 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்.!!
six crores worthabale drugs seized in chennai
தமிழகம் முழுவதும் போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலைத் தடுப்பதற்காக போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் போலீசார் சென்னை பரங்கிமலையில் இன்று சோதனை நடத்தியதில் ஒரு கிலோ கோகைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்தச் சம்பவம் குறித்து போலீசார் 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் மூன்று பேர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்தும் ஒரு கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட இரண்டு கிலோ கோகைனின் சந்தை மதிப்பு ரூ.6 கோடி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் கடற்கரையில் கழிவு பிளாஸ்டிக்கை சேகரிக்கும் போது கோகைன் கிடைத்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அடுத்தடுத்து போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
six crores worthabale drugs seized in chennai