மதுரை || வேலைசெய்யும் போது திடீரென இடிந்து விழுந்த சாளரம் - தொழிலாளர்களின் நிலை என்ன? - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டம் வைக்கம் பெரியார் நகரில் தனியார் ஷோரூம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. இந்த நிலையில், இந்த ஷோரூமில் இன்று வழக்கம் போல் கட்டுமானப் பணி நடைபெற்றது. இந்த வேலையில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில், கட்டுமானப் பணிக்காக போடப்பட்டிருந்த இரும்பு சாளரம் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் வேளையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களில் 6 பேர் படுகாயமடைந்தனர். முப்பதுக்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. அதன் படி போலீசார் விரைந்து வந்து படுகாயமடைந்தவரை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பினர். பின்னர் இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலை செய்யும் போது சாளரம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

six north state employees injured building collapse in madurai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->