நடுக்கடலில் மாயமான தூத்துக்குடி மீனவர்கள் பத்திரமாக மீட்பு.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர், தனது நாட்டுப்படகில் அதே ஊரைச் சேர்ந்த 5 பேருடன் கடந்த 21-ந் தேதி ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றார்.

ராமேசுவரம், பாம்பன் கடல் பகுதியில் இருந்து சுமார் 30 கடல் மைல் தொலைவில் கடலில் மீன்பிடித்துக் கொண்டு இருந்த இவர்கள் 6 பேரும் கடந்த 26-ந் தேதி கரைக்கு திரும்பி வர வேண்டும். ஆனால் நேற்று வரை கரைக்குத் திரும்பி வரவில்லை.

மேலும் அவர்களது படகில் இருந்த தொலை தொடர்பு கருவிகளும் வேலை செய்யாததால் அவர்களைத் தொடர்புக் கொள்ளவும் முடியவில்லை. இதையடுத்து திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி சங்கம் சார்பில் தூத்துக்குடி மீன்வளத்துறை, மாவட்ட நிர்வாகம், மரைன் போலீசார் மற்றும் கடலோர பாதுகாப்பு படை ஆகியோருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அதன் படி கடலோர பாதுகாப்பு படை கப்பல்கள் மூலம் மாயமான மீனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், நடுக்கடலில் மாயமான மீனவர்கள் 6 பேர் தற்போது சர்வதேச கடல்பகுதி அருகே பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இன்னும் 3 மணி நேரத்தில் அவர்கள் தூத்துக்குடி திரும்புவார்கள் என்றுத் தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

six thoothukudi fishermans rescue in sea


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->