சேலம் பேருந்து நிலையத்தில் ரூ.62 லட்சம் பணத்தோடு சிக்கிய முதியவர்.! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ திருமகன் ஈவேரா இறப்பினால் காலியாக ரிவிக்கப்பட்ட இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்திருந்தது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வந்தது.

 

ஒரு புறம் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்தத் தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. 

இதற்கிடையே இந்தத் தேர்தலில் அரசியல் கட்சித் தலைவர்கள் பொதுமக்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் நான்கு நிலை கண்காணிப்பு குழு, மூன்று பறக்கும் படை உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது.

அவர்கள் அனைவரும் தொகுதி முழுவதும் 24 மணி நேரம் சுழற்சி முறையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சேலம் பேருந்து நிலையத்தில் முதியவர் ஒருவர்சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்தார். 

அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த முதியவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்து உள்ளார். இதைத் தொடர்ந்து போலீசார் அவரிடம் நடத்திய கிடுக்குப்புடி விசாரணை மேற்கொண்டனர்.

அதில், முதியவரிடம் கட்டுக்கட்டாக ரூ.62 லட்சம் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அந்த பணத்தை பறிமுதல் செய்து அந்த பணம் எங்கிருந்து வந்தது? யாராவது கொடுத்து அனுப்பினார்களாக?  என்று பல கோணங்களில் விசசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sixty two lakhs money seized to old man in salem bus stand


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->