தஞ்சாவூர் : ஜமாத் தலைவருக்கு கொரியரில் வந்த பார்சல் - அதிரவைத்த சம்பவம்.! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் : ஜமாத் தலைவருக்கு கொரியரில் வந்த பார்சல் - அதிரவைத்த சம்பவம்.!

தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு அருகே உள்ள முகமது பந்தர் பள்ளிவாசலில் ஜமாத் தலைவராக செயல்பட்டு வருபவர் முகமது காசிம். இவருக்கு  பள்ளிவாசல் முகவரியில் நவ்மான்பாய் கான் என்கிற பெயரில் ஃபிரெஞ்ச் எக்ஸ்பிரஸ் கொரியரில் பார்சல் ஒன்று வந்துள்ளது.

இந்த பார்சலை வாங்கி முகமது காசிம் திறந்து பார்த்துள்ளார். அதில் ஒரு மனித மண்டை ஓடு இருந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த முகமது காசிம் கொரியரில் தெரிவிக்கப்பட்ட செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டுள்ளார். 

அப்போது எதிர் திசையில் பேசிய நபர் தான் கோவாவில் இருப்பதாகவும் பார்சல் எதுவும் அனுப்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இதையடுத்து முகமது காசிம் சம்பவம் தொடர்பாக போலீஸ்சாருக்குத் தகவல் தெரித்தார். அதன் படி அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பார்சலில் வந்த மண்டை ஓட்டை கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பியுள்ளார்.

மேலும், பார்சலில் வந்த மண்டை ஓடு ஆணா, பெண்ணா, வயது,  எப்போது இறந்தது உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளவும் உத்தரவிடபட்டுள்ளது. இதையடுத்து போலீசார் முகமது காசிமிடம்  சம்பவம் தொடர்பாக புகாரினை பெற்றுக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில்   பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

skull in parcel arrived to jamaat leader in thiruvaiyar


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->