பாம்பை வைத்து வித்தை : ஜாமீன் தர மறுத்த நீதிமன்றம்.! - Seithipunal
Seithipunal


மதுரை கீழக்குயில்குடி பகுதியில் பொது இடத்தில் இரண்டு பேர் பாம்புகளை நடனமாட செய்து பொதுமக்களிடம் பணம் வசூலித்ததாக வனத்துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது. 

இப்புகாரின் பேரில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்ட பாபு, தனக்கு முன்ஜாமீன் கேட்டு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, மனுதாரர் உள்பட 2 பேர் பொது இடத்தில் சாரைப்பாம்புகளை நடனமாட செய்து பணம் வசூலித்துள்ளனர். 

இதில் குற்றம் சாட்டப்பட்டவரில் ஒருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து இரண்டு பாம்புகள் மீட்கப்பட்டுள்ளன. 

மேலும், சாரைப்பாம்பு உள்ளிட்ட 15 வகையான பாம்புகளை அவர்கள் வைத்துள்ளனர். அவை இன்னும் மீட்கப்படவில்லை. அவர்கள் மீதான விசாரணை நிலுவையில் உள்ளது. 

எனவே மனு தாரருக்கு முன்ஜாமீன் அளிக்கக்கூடாது என்று வாதாடினார். இதன் பின்னர் நீதிபதி, மனுதாரரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

snake case chennai hc division order


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->