பள்ளி வகுப்பறையில் புகுந்த பாம்பு! அலறி அடித்துக்கொண்டு ஓடிய மாணவர்கள்!
Snake in Aranthangi Municipal Primary School classroom
அறந்தாங்கி நகராட்சி தொடக்கப்பள்ளி வகுப்பறையில் பாம்பு புகுந்ததால் பள்ளி மாணவர்கள் அலறி அடித்து ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சி பகுதியில் தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
பள்ளிக்கு மிக அருகாமையில் குளம் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த குளத்தில் நீண்ட ஆண்டுகளாக சுத்தம் செய்யப்படாமல் குளத்தில் ஆகாயத்தாமரை, அல்லி செடி உள்ளிட்டவைகள் வளர்ந்து குளம் மாசுபற்று உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று நேற்று மாலை வகுப்பறைக்குள் கரும்பலகின் மேல் பாம்பு ஒன்று இருப்பதை கண்ட மாணவர்கள் அலறிஅடித்துக் கொண்டு வெளியே ஓடி உள்ளனர்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் வகுப்பறைக்கு சென்று பார்த்தபோது கரும்பலகையின் மேல் பாம்பு ஒன்று சுற்றிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் இது குறித்து தலைமை ஆசிரியர் தீயணைப்பு துறை வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த தீயணைப்பு துறை வீரர்கள் பாம்பை லாவாகுமாக பிடித்து சாக்குப்பைக்குள் அடைத்து எடுத்துச் சென்று காட்டுப் பகுதியில் விட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது மழை காலம் தொடங்கியுள்ள நிலையில் தண்ணீர் பகுதி உள்ள பகுதிகளில் ஆங்காங்கே பாம்புகள் தஞ்சைமடைந்துள்ளது. எனவே நகராட்சி தொடக்கப்பள்ளி மாணவர்களின் நலன் கருதி குட்டைகுளத்தை உடனடியாக தூர்வாரி சுத்தப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
English Summary
Snake in Aranthangi Municipal Primary School classroom