சாலமன் பாப்பையா மனைவி மறைவு; முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்..!
Solomon Papaiah wife passes away Chief Minister Stalin condoles
தமிழ் அறிஞர் மற்றும் பிரபல பேச்சாளர் சாலமன் பாப்பையாவின் மனைவி ஜெயபாய் வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். அவரது உடலுக்கு அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
சாலமன் பாப்பையா மனைவியின் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்த்துள்ளார்.
இது குறித்து தமிழக முதல்வர் வெளியிட்ட எக்ஸ் தளபதிவில், "தமிழறிஞரும் பிரபல பேச்சாளருமான பேராசிரியர் திரு. சாலமன் பாப்பையா அவர்களின் துணைவியார் திருமதி. ஜெயபாய் அவர்கள் மறைந்த செய்தியறிதது மிகவும் வருத்துகிறேன்''. "உற்ற துணையான வாழ்விணைரை இழந்து தவிக்கும் திரு. சாலமன் பாப்பையா அவர்களுக்கு எனது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரபல பேச்சாளர் சாலமன் பாப்பையா மதுரையை சேர்ந்த தமிழ் அறிஞரும் பேராசியரும் ஆவார். இவர் அரசரடி பகுதியில் உள்ள ஞானஒளிபுரத்தில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது மனைவி ஜெயபாய் (86). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். வயது முதிர்வு காரணமாக இன்று காலை ஜெயபாய் காலமானார். அவரது உடல் அவருடைய இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த தமிழக தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
சாலமன் பாப்பையாவுக்கும், குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து மதுரையைச் சேர்ந்த தமிழஞறிகள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், பட்டிமன்ற பேச்சாளர்கள், தமிழ் பேராசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள், அரசுத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் என, ஏராளமானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மாலையில் அவரது இல்லத்தில் இறுதி சடங்கு நடந்தது. தத்தனேரியில் உள்ள கல்லறை தோட்டத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது என, குடும்பத்தினர் தெரிவித்தனர்.
English Summary
Solomon Papaiah wife passes away Chief Minister Stalin condoles