விருதுநகர் : தகாத உறவில் ஈடுபட்ட தாயை சரமாரியாகத் தாக்கிய மகன் கைது.!
son attack mother for illegal relation ship in viruthunagar
தகாத உறவில் ஈடுபட்ட தாயை சரமாரியாகத் தாக்கிய மகன் கைது.!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருச்சுழி பகுதியைச் சேர்ந்தவர்கள் பிச்சை-ஆனந்தி தம்பதியினர். இவர்களுக்கு சந்தோச ராஜா என்ற மகன் உள்ளார். ஆனால், இந்தத் தம்பதியினர் குடும்பப் பிரச்சினையின் காரணமாக கடந்த ஓராண்டுக்கு முன்பே பிரிந்துவிட்டனர்.
ஆனால், சந்தோச ராஜா தனது தந்தை பிச்சையுடன் வசித்து வருகிறார். இருப்பினும் அவர் தன் தாய் ஆனந்தியை வந்து பார்த்துச் செல்வார். இந்த நிலையில் தனியாக வாழ்ந்து வந்த ஆனந்திக்கு வேறொரு நபருடன் தொடர்பு ஏற்பட்டதாக சந்தோச ராஜாவுக்குத் தெரியவந்தது.
உடனே அவர் இந்தத் தொடர்பை கைவிடுமாறு தன் தாயைக் கண்டித்துள்ளார். ஆனால் ஆனந்தி அந்த தொடர்பை மாற்றிக் கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சந்தோச ராஜா தன் நண்பர் துரைப்பாண்டி என்பவருடன் தனது வீட்டுக்குச் சென்றார்.
அங்கு இருவரும் சேர்ந்து ஆனந்தியை அரிவாள் மற்றும் கம்பால் சரமாரியாகத் தாக்கினர். இதில் ஆனந்தி சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து கதறியுள்ளார். இந்த சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் ஆனந்தியை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தோச ராஜா மற்றும் துரைப்பாண்டியைக் கைது செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
son attack mother for illegal relation ship in viruthunagar