இறந்த தாயின் உடலை வீட்டினுள் புதைத்த மகன்.. மயிலாடுதுறை அருகே நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்..! - Seithipunal
Seithipunal


இறந்த தாயின் உடலை வீட்டிற்குள் புதைத்துவிட்டு மனநலம் பாதிக்கப்பட்ட மகன் அருகிலேயே இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், புதுபட்டி பகுதியை சேர்ந்தவர் இந்திராணி.  இவரது மகன் பிரபாகரனுக்கு கடந்த 3 ஆண்டுகளாக மனம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள இந்திராணி நேற்று முதல் காணவில்லை என கூறப்படுகிறது.

அவர் வீட்டிலிருந்து வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்பொழுது அங்கே ஒரு குழி தோண்டி இருப்பது தெரியவந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அந்த மண்ணை தோண்டி பார்த்த போது அதில் இந்த இந்திராணின் சடலம் கிடந்தது. உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்த இந்திராணியை என்ன செய்வது என்று தெரியாமல் அவரது மனநிலை பாதிக்கப்பட்ட மகன் வீட்டிற்குள்ளே புதைத்தது தெரியவந்தது.

இதனை அடுத்து அவரின் மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Son bury his mother body


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->