காரைக்குடி அருகே பரபரப்பு.! மாமனாரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு மருமகன் தப்பியோட்டம்.! - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டத்தில் மாமனாரை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி ஓடிய மருமகனை போலீசார் தேடி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கோவிலூரை சேர்ந்தவர் ரங்கம்மாள். இவருக்கு அழகாபுரியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் ராமச்சந்திரன் தினமும் மது அருந்திவிட்டு வந்து ரங்கம்மாளை‌ அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதனை மாமனார் நாகப்பன், தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராமச்சந்திரன் அங்கிருந்த நாட்டுத் துப்பாக்கியால் மாமனாரை சுட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் படுகாயமடைந்த நாகப்பன் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்து வந்த போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து, மாமனாரை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி ஓடிய மருமகனை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Son in law escapes after shooting father in law in Karaikudi near


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->