குடும்ப தகராற்றால் மாமியாரை கொன்ற மருமகன்.. மதுரை அருகே பரபரப்பு..! - Seithipunal
Seithipunal


குடும்ப தகராற்றால் மாமியாரை கொலை செய்த மருமகனை கொலை செய்த காவல்துறையினர் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம், நெடுமதுரையை சேர்ந்தவர் ஜெயா . இவருக்கு முனியாண்டி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் இடையில் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது இந்நிலையில், திருமங்கலம் அருகே உள்ள வலையங்குளம் பகுதியில் ஒத்திக்கு வீடு பார்த்துள்ளனர். 

அதற்கு பணம் தருவதற்காக ஜெயாவின் நகைகளை அடுகு வைத்துள்ளார். அதனை திரும்ப மீட்க முடியாததால் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதனால், ஜெயா தனது தாய் வீட்டிற்கு சென்றதோடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனை அறிந்த முனியாண்டி இதுகுறித்து மனைவி மற்றும் மாமியாரிடம் கேட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த முனியாண்டி அரிவாளை எடுத்து மாமியார் காளியம்மாள், மனைவி ஜெயா  ஆகியோரை வெட்டியுள்ளார்.இதில், காளியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கதினர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவரின் சடலத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் முனியாண்டியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Son In Law Kills His Mother in law Near Madurai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->