திடீரென காதை பிளந்த சத்தம் - மணப்பாறை அருகே பரபரப்பு.!
sound heard in manaparai and near places at trichy
மணப்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று திடீரென பயங்கர சத்தம் கேட்டுள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று பிற்பகலில் காதை பிளக்கும் வகையில் பயங்கர சத்தம் கேட்டுள்ளது. இந்த சத்தத்தால் வீடுகளில் உள்ள கதவு, ஜன்னல்கள், கண்ணாடிகள் உள்ளிட்டவை அதிர்ந்துள்ளன.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், நில அதிர்வு ஏற்பட்டதாக நினைத்து பயந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். மேலும், இந்த சத்தம் ஒரே ஒரு முறைதான் கேட்டதாகவும், ஆனால் அதன் அளவு மிகவும் அதிக அளவில் இருந்ததாகவும் அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:- "நில அதிர்வு எதுவும் ஏற்பட்டதாக பதிவாகவில்லை. சத்தம் எதனால் வந்தது என்பதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றுத் தெரிவித்துள்ளனர்.
English Summary
sound heard in manaparai and near places at trichy