முதல்வருக்கு நன்றி தெரிவித்த தென்னிந்திய நடிகர் சங்கம்: ஏன் தெரியுமா? - Seithipunal
Seithipunal


தமிழக பட்ஜெட்டில் திரைப்பட நகரத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்ததற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதி நிலை அறிக்கையில் தமிழ் திரை துறையினரின் நீண்ட நாள் கோரிக்கை இடம்பெற்றுள்ளது. 

சென்னையை ஒட்டிய பூந்தமல்லியில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் நவீன தொழில்நுட்பங்களுடன் படபிடிப்பு தளங்கள், புரொடக்ஷன் பணிகள் பிரிவு, நட்சத்திர ஹோட்டல்கள், சமூக கட்டமைப்பு வசதிகளுடன் திறந்த வெளியில் திரையரங்கம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. 

தமிழ் படங்களின் படப்பிடிப்பு அண்டை மாநிலங்களில் நடைபெற்றால் இங்குள்ள நடிகர்கள் மற்றும் திரை உலக தொழிலாளர்களுக்கு வாய்ப்புகள் குறைகிறது. 

ஆனால் இந்த திட்டத்தின் மூலம் தொழிலாளர்கள் நலம் பெறுவார்கள். இந்த திட்டம், தமிழ் திரைப்படங்களை உலக வரைபடத்தில் அழுத்தமாக பதிவதற்கு ஊக்கமளிக்கிறது. 

தமிழ் திரை உலகின் வாழ்வாதாரத்தை மீட்டெடுத்த முதல்வருக்கு தெனிந்திய நடிகர் சங்கம் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

South Indian Actors Association thanked CM


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->