பராமரிப்பு பணி காரணமாக முக்கிய ரயில்கள் ரத்து... தெற்கு ரயில்வே அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


சென்னை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காட்பாடி மார்க்கமாக செல்லும் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி காட்பாடி மற்றும் ஜோலார்பேட்டை இடையே இயக்கப்படும் விரைவு ரயில் ஜனவரி 7, 11, 27 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதே போன்று வேலூர் கண்டோன்மென்ட் முதல் அரக்கோணம் வரை இடையே காலை 10 மணி மற்றும் மறுமார்க்கத்தில் மதியம் 2:05 மணிக்கு இயக்கப்படும் ரயில் வரும் ஜனவரி 24ஆம் தேதி முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

அதேபோன்று கோவையிலிருந்து காலை 6:15 மணிக்கு புறப்படும் அதிவிரைவு ரயில், சென்னை சென்ட்ரலில் இருந்து பிற்பகல் 2:30 மணிக்கு புறப்படும் அதிவிரைவு ரயில், மைசூரில் இருந்து காலை 5:00 மணிக்கு புறப்படும் அதிவிரைவு ரயில், சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 3:30 மணிக்கு புறப்படும் லால்பாக் விரைவு ரயில் என அனைத்து ரயில்களும் வரும் ஜன.24ம் தேதி காட்பாடி மற்றும் சென்னை சென்ட்ரல் இடையிலான பகுதி வரை ரத்து செய்யப்படுவதாக என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Southern Railway announced trains canceled due to maintenance work


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->