மின்சார ரெயில்கள் ரத்து - தாம்பரத்திலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!
special bus run in thambaram for electric train cancelled
தாம்பரம் ரெயில் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவைத்தால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்து இருப்பதாவது:-
"தாம்பரம் ரெயில் நிலையத்தில் இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் செல்லும் மின்சார ரெயில்கள் பல்லாவரம் ரெயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஆகவே, அவ்வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி மாநகர போக்குவரத்துக் கழகம் தற்போது இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக தாம்பரத்தில் இருந்து பல்லாவரம் பேருந்து நிலையத்திற்கு 10 பேருந்துகள், தியாகராயநகர் பேருந்து நிலையத்திற்கு 20 பேருந்துகள் மற்றும் பிராட்வே பேருந்து நிலையத்திற்கு 20 பேருந்துகள் என மொத்தம் 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
special bus run in thambaram for electric train cancelled