தீபாவளி பண்டிகை - தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வார விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் வரும் வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளதால் 14,086 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "அக்டோபர் 28, 29 மற்றும் 30 உள்ளிட்ட தேதிகளில் சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கிளாம்பாக்கத்தில் இருந்து திருச்சி, கரூர், மதுரை, நெல்லை, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், திண்டுக்கல், தேனி, திருப்பூர், பொள்ளாச்சி, கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், விருத்தாச்சலம், அரியலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதேபோல், கோயம்பேட்டில் இருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், ஓசூர் மற்றும் பெங்களூர் செல்லும் பேருந்துகள் மற்றும் திருத்தணி வழியாக திருப்பதி செல்லும் பேருந்துகள், கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும் புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மேலும், மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் பேருந்துகள், வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை பேருந்துகள் இயக்கப்படுகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

special buses run in tamilnadu for deepawali festival


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->