வாக்காளர் அட்டை பெற சிறப்பு முகாம்!..இது தெரிஞ்சா உடனே விண்ணப்பிக்கலாம்! - Seithipunal
Seithipunal


நாடு  முழுவதும் நடப்பு ஆண்டில் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக முடிவடைந்த நிலையில், கூட்டணி பெரும்பான்மையுடன் மத்தியில் பாஜக வெற்றி பெற்றது. இதையடுத்து மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக மோடி  பொறுப்பேற்றுள்ளார்.

தொடர்ந்து இந்தியாவில் உள்ள மாநிலங்களில் சட்டசபை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.  தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில் ஆளும் கட்சியான திமுக வெற்றி பெற்றது.

தொடர்ந்து தமிழத்தில் வரும் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில்  அனைத்து கட்சிகளும்  இதற்காக மும்முரமாக பணியில் ஈடுபட்டு வருகின்றது.
இந்த நிலையில், அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கடிதம் எழுதியுள்ளார். அதில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக நவம்பர் மாதம்  9, 10, 23, 24 ஆகிய 4 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும் என்றும், சிறப்பு முகாமுக்கு தேவையான வாக்காளர் படிவங்களை தயாராக வைத்திருக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.


மேலும், ஜனவரி 1, 2025 அன்று 18 வயதைப் பூர்த்தி செய்பவர்கள் புதிதாக வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என்று கடித்ததில் தெரிவித்துள்ளார்.
மேற்குறிப்பிட்ட நாட்களின் போது வாக்காளர் அட்டை இல்லாதோர் புதிய வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Special camp to get voter card if you know this then apply immediately


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->