அதிமுக ஆட்சியில் நடந்த சொத்து வரி ஏய்ப்பை விசாரிக்க சிறப்புக்குழு அமைக்கப்படும் - மேயர் பிரியா.!
special force appointed for Property tax evasion in chennai corporation
அதிமுக ஆட்சியில் நடந்த சொத்து வரி ஏய்ப்பை விசாரிக்க சிறப்புக்குழு அமைக்கப்படும் - மேயர் பிரியா.!
சென்னை மாநகராட்சியில் மாமன்றக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் தனியார் நிறுவனங்கள் சொத்து வரி செலுத்தியதில் முறைகேடு நடந்துள்ளதாக கணக்குக்குழு தலைவர் தனசேகரன் புள்ளி விவரங்களை வெளியிட்டார். அதன் பின்னர் அவர் பேசியதாவது :- "சென்னையில் உள்ள சில தனியார் நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் தனியார் பள்ளிகள் சொத்து வரி ஏய்ப்பு செய்துள்ளன.
அதில், ஒரு சில நட்சத்திர ஓட்டல்களுக்கு நோட்டீஸ் வழங்கி ஒரு மாதம் ஆகியும் இதுவரைக்கும் பதில் அளிக்கவில்லை. அதிமுக ஆட்சியில் அதிகாரிகள் துணையுடன் மொத்த பரப்பளவில் வரியை குறைத்து கணக்கிட்டு சொத்து வரி வசூலித்ததால் மாநகராட்சிக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளது.
அதனால், சென்னையில் உள்ள அனைத்து தனியார் ஓட்டல்கள் மற்றும் தனியார் பள்ளிகளையும் சிறப்புக் குழு அமைத்து நேரில் ஆய்வு செய்து முழு பரப்பளவைக் கணக்கிட்டு புதிய சொத்து வரி வசூலிக்க வேண்டும். கடந்த காலத்தில் ஏய்ப்பு செய்த தொகையும் திரும்பப் பெற வேண்டும்.
மேலும், கடந்த அதிமுக ஆட்சியில் அழுத்ததின் காரணமாக முறைகேடுக்கு துணைபோன அதிகாரிகளையும் விசாரணை செய்ய வேண்டும் என்று கணக்கு குழுத் தலைவர் தனசேகரன் வலியுறுத்தி பேசியுள்ளார். இதற்கு பதிலளித்த மாநகராட்சியின் மேயர் பிரியா, சென்னை மாநகராட்சி வருவாய்த்துறை மூலம் சிறப்புக் குழு அமைத்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்று உறுதியளித்தார்.
English Summary
special force appointed for Property tax evasion in chennai corporation