அரசு திட்டங்களைக் கண்காணிக்கும் வகையில் சிறப்பு அதிகாரிகள்.! - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் சார்பில் மக்களுக்குப் பயன்படும் வகையில் கல்வி, வேளாண்மை, தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலே இந்த திட்டங்கள் அறிவிக்கப்பட்டு அவை துறை ரீதியாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 

இதற்காக சிறப்பு திட்ட செயலாக்கத்துறை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த துறை மூலமாக அனைத்து மாவட்டங்களுக்கும் தமிழக அரசினால் அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் எந்த நிலையில் இருக்கிறது, திட்டங்கள் அனைத்தும் மக்களைச் சென்றடைகிறதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளுவதற்காக மாவட்ட வாரியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இந்த அதிகாரிகள், சிறப்பு திட்ட செயலாக்கத்துறையின் கீழ் நடக்கும் திட்டங்களுடைய செயல்பாடுகள் மற்றும் தரவுகள் குறித்து மாவட்ட வாரியாக ஆய்வு மேற்கொள்ளுவார்கள்.

மாதத்தில் 4 நாட்கள் இந்த ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அரசின் திட்டங்கள் உரிய பயனாளிகளுக்கு சென்றடைகிறதா திட்டங்களில் முறைகேடுகள் நடைபெறுகின்றதா என்பதையெல்லாம் ஆய்வு செய்து அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

special officers appointed in government scheme visit


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->