வைகாசி விசாக திருவிழா - திருச்செந்தூருக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கம்.!
special train run to thiruchenthur for vaikasi visaka festival
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா வருகிற 22-ந்தேதி நடைபெறுகிறது. கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்வார்கள். இந்த நிலையில், பக்தர்களின் வசதிக்காக நெல்லை-திருச்செந்தூர் இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:- "நெல்லையில் இருந்து காலை 6.40 மணிக்கு (வண்டி எண்:06857) சிறப்பு ரெயில் புறப்பட்டு காலை 8.15 மணிக்கு திருச்செந்தூரை சென்றடையும். மறுமார்க்கத்தில் திருச்செந்தூரில் இருந்து (வண்டி எண்:06858) சிறப்பு ரெயில் காலை 9.15 மணிக்கு புறப்பட்டு நெல்லையை காலை 10.50 மணிக்கு வந்தடையும்.
நெல்லையில் இருந்து (வண்டி எண்:06859) சிறப்பு ரெயில் மதியம் 11.25 மணிக்கு புறப்பட்டு 1 மணிக்கு திருச்செந்தூரை சென்றடையும். திருச்செந்தூரில் இருந்து (வண்டி எண்: 06860) சிறப்பு ரெயில் மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 3 மணிக்கு நெல்லையை வந்தடையும்.
இந்த சிறப்பு ரெயில்கள் பாளையங்கோட்டை, செய்துங்கநல்லூர், தாதன்குளம், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, நாசரேத், கச்சனாவிளை, குரும்பூர், ஆறுமுகநேரி, காயல்பட்டினம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இதில் 5 பொதுபெட்டிகள் மற்றும் ஒரு லக்கேஜ் வசதியுடன் கூடிய பெட்டி இணைக்கப்பட்டு இருக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
special train run to thiruchenthur for vaikasi visaka festival