தமிழகத்தில் விபத்தை ஏற்படுத்தும் ஸ்பீட் பிரேக்கர்கள், கண்டறிந்த நெடுஞ்சாலைத்துறை !!
speed breakers causing accidents in tamilnadu found by highway department
தமிழகத்தில் நெடுஞ்சாலைகள், மாநகராட்சி சாலைகள், பேரூராட்சிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் விதிமீறி அதிகமாக அமைக்கப்பட்டுள்ள ஸ்பீட் பிரேக்கர்களை அகற்றக் கோரி மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலைகளில் இதுபோன்ற 46 ஸ்பீட் பிரேக்கர்களை சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறை கண்டறிந்துள்ளது. ஸ்பீட் பிரேக்கர்களால் ஆம்புலன்ஸ்கள் செல்ல தடையாக இருப்பதாகவும் கோரிக்கை மனுவில் குறிப்பிட பட்டுள்ளது.
சாலைகளில் விதிமீறி அதிக அளவில் அமைக்கப்பட்டுள்ள ஸ்பீடு பிரேக்கர்களை அகற்றக் கோரி மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கைகள் தினமும் வருகிறது. முறையான அளவீடுகளுக்கு ஏற்ப ஸ்பீட் பிரேக்கர்களை அமைக்காததால் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுவதாக அந்த புகார்கள் கூறுகின்றன.
மாவட்டத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள ஸ்பீட் பிரேக்கர்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். 255 ஸ்பீட் பிரேக்கர்களில் 46 ஸ்பீட் பிரேக்கர்களால் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதும், விபத்துகள் ஏற்படுவதும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
நகரங்கள் மட்டுமல்லாமல் கிராமப்புறங்களில் உள்ள 672 ஸ்பீட் பிரேக்கர்களில், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளவற்றை, நகராட்சிகள் கீழ் உள்ள குழுக்கள் கண்டறியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுமதியின்றி மாநில நெடுஞ்சாலைகளில் ஸ்பீட் பிரேக்கர் அமைக்கும் அமைப்பு அல்லது தனிநபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
English Summary
speed breakers causing accidents in tamilnadu found by highway department