#BREAKING || ஆன்மீக சீர்திருத்தவாதி பங்காரு அடிகளார் காலமானார்!! - Seithipunal
Seithipunal


மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் குருவாக விளங்கிய பங்காரு அடிகளார் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அதிபராசக்தி சித்தர் இடத்தில் குருவாக விளங்கிய பங்காரு அடிகளார் அவருடைய பக்தர்களால் அம்மா என அன்புடன் அழைக்கப்பட்டவர். தற்போது 82 வயதாகும் நிலையில் இவர் ஆன்மீகத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளார். இவருக்கு தமிழக, கர்நாடகா, ஆந்திரா என பல்வேறு மாநிலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் உள்ளனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு பங்காரு அடிகளாருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. மேல்மருவத்தூர் சித்தர் பீடர் கருவறையில் அபிஷேக ஆராதனை செய்ய பெண்களை அனுமதித்தவர் பங்காரு அடிகளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆதிபராசக்தி மருத்துவ கல்வி மற்றும் பண்பாட்டு அறக்கட்டளையின் தலைவராக விளங்கி வந்தவர் தற்போது மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Spiritual reformer Bangaru Adigalar passes away


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->