ஆன்மீக அறிவியல் ஆராய்ச்சி - இஸ்ரோல் முன்னாள் தலைவர் சிவன் பரபரப்பு பேட்டி..!
Spiritual science research isrol ex leader press meet
நேற்று இஸ்ரோவின் முன்னாள் தலைவரும், விக்ரம் சாராபாய் நிறுவனத்தின் சிறப்பு பேராசிரியருமான டாக்டர் சிவன் தனது மனைவி மாலதியுடன் மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு வந்தார்.
ஆதீனத்திற்கு வந்த அவர், தர்மபுரம் ஆதீனத்தின் 27-வது குருமகாசன்னிதானத்தின் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகளை நேரில் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றார்.
அதன்பின்னர் இஸ்ரோவின் முன்னாள் தலைவர் சிவன் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்தப் பேட்டியில் தெரிவித்ததாவது:- "இந்தியா விண்வெளி துறையில் மட்டுமல்லாது அணுசக்தி துறை, வேளாண்துறை, வேளாண் அறிவியல் துறை, ரசாயன துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் வளர்ச்சி அடைந்து வருகிறது.
மிக விரைவில் இந்தியா உலகத்தில் முதன்மையான நாடாக மாறும். தற்போது 'மேக் இன் இந்தியா' என்ற திட்டத்தின் கீழ் 82 சதவீத பொருட்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன. இது விரைவில் 100 சதவீதம் என்ற இலக்கை அடையும்.
இந்தியாவில் உள்ள மாணவர்கள் தங்களுக்கு எதிர்காலத்தில் வாய்ப்புள்ள துறைகளை தேர்ந்தெடுத்து அதில் ஆழ்ந்து படிக்க வேண்டும். அறிவியலும், ஆன்மிகமும் வேறு வேறு துறைகள் என்றாலும் ஆன்மிக அறிவியல் குறித்து மேலும் ஆராய்ச்சிகள் செய்யப்பட வேண்டும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் இஸ்ரோல் முன்னாள் தலைவர் சிவன் தனது குடும்பத்துடன் சிறப்பு வழிபாடு மற்றும் ஆயுள் விருத்தி ஹோமம் செய்து வழிபட்டார்.
English Summary
Spiritual science research isrol ex leader press meet