இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்!....மேலும் 5 தமிழக மீனவர்கள் கைது! - Seithipunal
Seithipunal


இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி, தமிழக மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்து வருவது வாடிக்கையாகி வரும்  நிலையில், இதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்தும், இதை தடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

நேற்று முன்தினம் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 37 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில், நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த கன்னியாகுமரியை சேர்ந்த 5 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் விசைப்படகுடன் கைது செய்துள்ளனர்.

ஏற்கனவே தமிழ்நாடு மீனவர்கள்  37 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் 5 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மீனவர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் தமிழக மீனவர்களை இலங்கை அரசு மொட்டையடித்து அனுப்பி வைத்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sri Lankan Navy serial atrocity 5 more Tamil Nadu fishermen arrested


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->