பரபரப்பு! வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்! - Seithipunal
Seithipunal


வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேதாரண்யம் அருகே உள்ள கூடியகரை கடற்பகுதியில் இருந்து தமிழக மீனவர்கள் 500க்கும் மேற்பட்டோர் நாள்தோறும் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருவது வழக்கம். இந்தநிலையில் வழக்கம்போல் ஆறுக்காட்டுத் துறையை சேர்ந்த மீனவர்கள் நேற்று மாலை பைபர் படகு மூலம் மீன் பிடிக்க கடலுக்கு சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது நான்கு படங்களில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்களை வழிமறித்து கத்தியை காட்டியும் கம்பை உள்ளிட்டு ஆயுதங்களை காட்டியும் மிரட்டி உள்ளனர். உறுப்பினர் கத்தி கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கூடியகரை அருகே அரங்கேறி இந்த சம்பவத்தின் போது மீனவர்களின் படங்களில் இருந்த 700 கிலோ வலை, ஜி.பி.எஸ் கருவி, செல்போன், தங்கசெயின், மோதிரம் உள்ளிட்ட பொருட்களை கொள்ளை அடித்து சென்றதாக தெரிவிக்கின்றனர்.

எதிர்பாராத கடற்கொள்ளையர்கள் தாக்குதலால் காயமடைந்த சிவசங்கர், ராஜகோபால், தனசேகரன், செல்வகிருஷ்ணன் என நான்கு மீனவர்களும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடற்கொள்ளையர்கள் தாக்குதல் குறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sri Lankan pirates attack Vedaranyam fishermen


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->